Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா,எஸ்.கணேசன், கு.புஷ்பராஜ்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மெராயா – ஊவாக்கலை தோட்டத்தில் பாதை திருத்தப் பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நீர் தாங்கியை கொண்ட இழுவை வண்டி, வீதியை விட்டு விலகி அதே தோட்டப்பகுதியில் சுமார் 600 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்றுப் புதன்கிழமை மாலை 6.45 க்கு இடம்பெற்ற இந்த விபத்தில் அதே இடத்தைச் சேர்ந்த இருவர் பலியாகியுள்ளனர் என்று லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில், ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், மற்றொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். வாகனத்தின் இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லிந்துலை – ஊவாக்கலை தோட்டத்தைச் சேர்ந்த வன்னராஜா சரன்ராஜ் (வயது – 26)இ ஞானபண்டிதம் சுரேந்திரன் (வயது – 37) ஆகிய இருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
அவ்விருவரின் சடலங்களும் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவ்விரு சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago