Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், எஸ்.சுஜிதா, ஆ.ரமேஷ்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ஜீன் தோட்டப் பகுதியில், தனியார் நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்டுவரும் (பவர் ஹவுஸ்) நீர்மின் உற்பத்தி நிலையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தோட்டத் தொழிலாளர்கள், நேற்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்திட்டத்தினால், எதிர்காலத்தில் தமது குடியிருப்புகள், மண்சரிவு அனர்த்தத்துக்கு உள்ளாகும் என்றும் 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தினால், சுமார் 60 குடியிருப்புகள் பாதிக்கப்படும் அச்சம் நிலவுவதாக சூழலியலாளர்களும் கூறியுள்ளனர்.
நீர்மின் உற்பத்தி நிலைய திட்டத்தின் ஒரு கட்டமாக, நீர் குழாய்களை புதைக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக மண்ணகழப்பட்டு வருகின்றது.
மேற்படி 60 குடியிருப்புகளுக்கும் மேற்பகுதியிலே மண்ணகழப்பட்டு வருகின்றது. இவ்வாறு மண் அகழப்பட்டு நீர் செல்வதற்கான வடிகால் அமைப்பக்கப்பமாயின், தாம் எதிர்காலத்தில் மிக மோசமாக பாதிக்கக்கூடிய சூழல் ஏற்படுமென்று தெரிவித்துள்ள தொழிலாளர்கள், எழுத்துமூலமான கடிதத்தையும் தோட்ட அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.
ஆரம்பத்தில், இத்திட்டத்தை நிறுத்துவதாக தெரிவித்துள்ள தோட்ட அதிகாரி, மீண்டும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு, தனியார் கம்பனிக்கு இடமளித்துள்ளார்.
அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வைப் பெற்றுக்கொடுக்காவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3 minute ago
8 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
11 minute ago