2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

பசளைத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பாதிப்பு

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

பலாங்கொடை, சுற்றுப் பிரதேசங்களில் நிலவும் யூரியா பசளைத் தட்டுப்பாடு காரணமாக, குறித்த பகுதியிலுள்ள மிளகு, மரக்கறிச் செய்கையாளர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வந்த மழையுடனான வாநிலை தற்போது சீரடைந்து வருகின்ற நிலையில், திடீரென ஏற்பட்டுள்ள பசளைத் தட்டுப்பாடு காரணமாக, தொடர்ந்தும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பசளை விற்பனை நிலையங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பசளை இல்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, தங்களது விவசாயத்துக்குக் காணப்படும் இந்தப் பசளைத் தட்டுப்பாட்டுப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு, அரசாங்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--