2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

படுக்கையறையை பதம்பார்த்த மண்மேடு

சிவாணி ஸ்ரீ   / 2017 மே 26 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹத்தை, ஓப்பாத்த தோட்டத்திலுள்ள வீடொன்றின் மீது, மண்மேடு சரிந்து விழுந்ததில், வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், வீட்டின் உரிமையாளர்கள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்மேடு சரிந்து வந்து வீட்டின் சுவர் மீது விழுந்ததில், வீட்டின் படுக்கையறையே சேதமாகியுள்ளது.

வீட்டுரிமையாளர்கள் நித்திரையில் இருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் எனினும் உரிமையாளர்கள், சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும் இவர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .