2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

பாடசாலைக் கட்டடம் திறப்பு

Kogilavani   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ், எஸ்.சதிஸ்

பத்தனை திம்புள்ள தமிழ் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடம், மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரனால், நேற்று  (11) திறந்து வைக்கப்பட்டது.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவின் ஆலோசனைக்கமைய,  'அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' எனும் வேலைத்திட்டத்தின் கீழ், கல்வி அமைச்சின் 90 இலட்சம் ரூபாய் செலவில், இந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  

கட்டடத் திறப்பு விழாவில், மத்திய மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் சத்தியேந்திரா, கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளர் ராஜமணி பிரசாந் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X