2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பெண்கள் இருவரைத் தாக்கிய நபர் கைது

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - மீகஹகிவுல பிரதேசத்திலுள்ள வியாபார நிலையத்தில், பெண்கள் இருவரைத் தாக்கியக் குற்றச்சாட்டில் ஒருவர் இன்று(19) கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படிப் பிரதேசத்திலுள்ள வியாபார நிலையமொன்றுக்குச் சென்றவர்கள், வியாபார நிலையத்திலிருந்த பெண்களிடம் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என்றுக் கேட்டு, அவ்விருவரையும் தாக்கிவிட்டுச் சென்றுள்ளனர் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.  

சம்பவத்தில் மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த வை.எம்.லீலாவதி (வயது 73), அவரது மருமகளான எச்.எச்.இந்திகா துஷாரி (வயது 47), ஆகியோரே காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வாக்குவாதமே இச்சம்பவத்துக்குக் காரணம் என்றுத் தெரியவருகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .