2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய பாதை வேலைத்திட்டம் ஆரம்பம்

சிவாணி ஸ்ரீ   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பல வருட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத அதி கஷ்டப்பிரதேச வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான 'புதிய பாதை'  எனும் வேலைத்திட்டமொன்று, சப்ரகமுவ மாகாண சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள 70 அதி கஷ்டப் பிரதேச வீதிகள் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதலாவது அபிவிருத்திப் பணிகள், இரத்தினபுரி மாவட்டத்தில் உட ரங்வல பிரதேசத்தில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அத்துடன், பிரதேச மக்களின் கோரிக்கைக்கு அமைய, புதிதாக உங்ரெஸ்ஸ மரக்கன்றும், ஆளுநரால் நாட்டி வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .