2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

’பெருந்தோட்டத்துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை’

Editorial   / 2020 ஜனவரி 08 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத்துறையின் பல பகுதிகளில், தபால் சேவை ஒழுங்கான முறையில் நடைபெற்று வராமல் இருந்த நிலையில், தற்போது பெருந்தோட்டத்துறைக்கான தபால் சேவையை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தொகுதி முறையிலான தபால் பெட்டிகளை, பெருந்தோட்டக் குடியிருப்புகளில் பயன்படுத்தவுள்ளதாகவும் இத்திட்டம், நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும், தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டப் பகுதிகளில், தபால் விநியோக சிக்கல் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறிய அவர், இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

தபால் ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாகவே, பெருந்தோட்டங்களுக்கான சேவையை முன்னெடுப்பதில் சிக்கல் நிலவியது என்றும் எனவே, பொது இடத்தில் தபால் பெட்டியை நிறுவுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் இதன்மூலம், தற்போது காணப்படும் சிக்கல்களை நிவர்த்திக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--