2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

போலி வாக்கு சீட்டுகளுடன் நகர சபை உப தலைவர் கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.சதீஸ்

தேர்தல்  சட்டவிதிகளை மீறிய வகையில், தன்வசம் 211 மாதிரி வாக்குச் சீட்டுகளை வைத்திருந்த தலவக்கலை, லிந்துலை நகரசபையின் உப தலைவரை, நேற்று (15) இரவு தலவாக்கலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேர்தல் பிரசார  சட்டவிதிகளை மீறி,  தலைவக்கலை மற்றும்  லிந்துலை பிரதேசத்தில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு  அமைய தலவாக்கலை பொலிஸார் இவரைக் கைது செய்துள்ளனர்.

இவரை, நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .