Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஜித்லால் சாந்தஉதய
நிவித்திகல கலவான வீதி, கெடனிகேவத்த பிரதேசத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாயலின் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டக் குற்றச்சாட்டில் இருவரை, நிவித்திகல பொலிஸார் இன்று(18) கைதுசெய்துள்ளனர்.
நிவித்திகல நகரில், மோட்டார் திருத்தும் பணியில் ஈடுபட்டுவரும் நபர் உள்ளடங்களாக இருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நிவித்திகல தோரகொல்ல பிரதேசம் மற்றும் உடகரவிட, பிங்கந்தவத்தே பிரதேசம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள், இன்று (18) காலை 7.00-7.30 மணியளவில், ஓட்டோவொன்றில் வந்து பள்ளிவாயலின்மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரியவருகிறது.
கல்வீச்சுத் தாக்குதலால் பள்ளிவாயலின் யன்னல் கண்ணாடிகள் சேதமாகியுள்ளன என்று, தெரியவருகிறது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
22 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
54 minute ago
1 hours ago
1 hours ago