2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

பெண் சிசுவின் சடலம் மீட்பு

Kogilavani   / 2016 மார்ச் 27 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, ஸ்ரீ தலதாமாளிகைக்கு அருகில் செல்லும் வாவியிலிருந்து பெண் சிசுவின் சடலத்தை பொலிஸார் இன்று(27) காலை மீட்டுள்ளனர்.

அவ்வீதி வழியாக  சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சிசுவானது, துணி ஒன்றில் சுத்தப்பட்ட நிலையில் வாவியில் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிசு கொலை செய்யப்பட்டு  பின்னர் இவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என்றும் அல்லது வாவியில் வீசப்பட்ட பின்னர் சிசு உயிரிழந்திருக்கலாமெனவும்  பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிசுவின் தாயை கைதுசெய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .