2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பாம்பு தீண்டி தொழிலாளி வைத்தியசாலையில்

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமச்சந்திரன்

தலவாக்கலை சென்கிளையார் தோட்டத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளி ஒருவர் பாம்பு தீண்டி நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தொழிலாளி தேயிலை மலையில் மானா வெட்டிக்கொண்டிருந்தபோது, விரியன் பாம்பு கடிக்கு உள்ளான நிலையில் கொட்டக்கலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

தலவாக்கலை - கிளனமோரா தோட்டத்தைச் சேர்ந்த அப்பாவு ராமையா வயது ( 54 ) என்பவரே இவ்வாறு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .