2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

போலி நாணயத்தாளுடன் பெண்கள் இருவர் கைது

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் நகரத்திலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்தில் 1,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி பொருட் கொள்வனவில் ஈடுபட்ட இரண்டு பெண்களை, ஹட்டன் பொலிஸார் நேற்று (26) கைது செய்துள்ளனர்.

கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த மேற்படி பெண்கள் இருவரும், நேற்று (26) பிற்பகல் ஹட்டன் நகர பகுதியிலுள்ள தொலைத்தொடர்பு நிலையத்துக்குச் சென்று  சில பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர். பின்னர், 1,000 ரூபாய் பெறுமதியான நாணயத்தாளை விற்பனையாளரிடம் கொடுத்துள்ளார்கள்.

இந்நிலையில் நாணயத்தாள் போலியானது என்று இனங்கண்ட உரிமையாளர், குறித்த பெண்கள் இருவரையும் தடுத்து வைத்து ஹட்டன் பொலிஸாருக்கு இச்சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, தொலைத்தொடர்பு நிலையத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்ததோடு குறித்த நாணயத்தாள் போலி எனவும்; உறுதிப்படுத்தியுள்ளனர்
கடந்த வாரம் கொழும்பிலுள்ள வர்த்தக நிலையத்தில் இருந்து மேற்படி நாணயத்தாள் தமக்குக் கிடைக்கபெற்றதாகவும் இந்த நாணயதாள் போலி என தங்களுக்குத் தெரியாததெனவும் குறித்த பெண்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .