2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

போலி பொது சுகாதார பரிசோதகர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

சுகாதார பரிசோதகர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, வர்த்தக நிலையங்களில் பணம் வசூலித்து வந்த, போலி சுகாதார பரிசோதகர் ஒருவரை, ஹட்டன் பொலிஸார், திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவைவையச் சேர்ந்த, 45 வயது நபரொருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர், ஹட்டன் நகரிலுள்ள உணவகமொன்றில், உணவுப் பொருட்களை சோதனையிட்டுக்கொண்டிருந்த போது, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தன்னை சுகாதார பரிசோதகர் என அடையாளப்படுத்திகொள்ளும் மேற்படி நபர், ஹட்டன் நகரிலுள்ள வியாபார நிலையங்களுக்குச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்போது அவர், பொருட்களை புகைப்படம் எடுத்துகொள்வதுடன், அப்புகைப்படத்துடன் நீதிமன்றத்துக்கு செல்லபோவதாக கூறி, வர்த்தகர்களை அச்சுறுத்தியுள்ளார்.

தனக்கு ஒரு தொகை பணம் தந்தால், தான் நீதிமன்றம் செல்வதை தவிர்ப்பதாகக் கூறி, இவர் வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்துள்ளார்.

இவர் தொடர்பில் சந்தேகம் கொண்ட வியாபாரிகள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்தே, மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--