Administrator / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
போதைப் பொருட்கள் வைத்திருந்த நால்வரையும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரையும் பொலிஸார், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கைதுசெய்துள்ளனர்.
அங்கும்புரை கண்டி வீதியில் வைத்து, 200 மில்லிகிராம் கஞ்சா கலந்த புகையிலை தூளுடன் ஒருவரை நேற்று (27) கைதுசெய்துள்ளதாக அங்கும்புர பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கும்புர, கண்டி வீதியில் வைத்து மேற்படி நபரை சோதனைக்கு உட்படுத்திய போது, குறித்த நபரிடமிருந்து கஞ்சா கலந்த புகையிலை தூளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப் பொருட்களுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வைத்திருந்த ஒருவரும்; பாபுல் போதைப் பொருள் அடங்கிய பாக்குகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இருவரும் மற்றும் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
4 minute ago
8 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
4 hours ago