2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'மக்களுக்கு சேவை செய்யாதோரை ஓரங்கட்டுங்கள்'

Kogilavani   / 2016 ஜூலை 26 , மு.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

'மக்களின் வாக்குகளைப் பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு ஆட்சியில் அமர்ந்த பின், தமது பதவிகளை துஷ்பிரயோகம் செய்து மாடிக்கு மாடி வீடுக்கட்டி பொதுமக்களின் அபிவிருத்தி, அபிலாஷைகளை நிறைவேற்றாத நபர்களை இனங்கண்டு தேர்தல் காலங்களில் அவர்களை ஓரங்கட்ட வேண்டும்' என பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

வாழ்வின் எழுச்சி அடிப்படை வங்கியின்  தலவாக்கலை காரியாலயத்தில்  ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய  அவர், 'எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பணத்துக்கு  விலை போகாமல், சுதந்திரமாக வாக்களிக்கவும் மக்கள் தமக்கு சேவை செய்பவர்களை இனங்காண்டு தெரிவு செய்வதற்கு ஏதுவாகவுமே, வட்டார அடிப்படையிலான தேர்தல் இம்முறை நடைபெற உள்ளது. எனவே, தலவாக்கலை வாழ் மக்கள், வட்டார அடிப்படையில் நடத்தப்படும் தேர்தலின்போது, ஊழல், மோசடியற்ற சமுதாய உணர்வு கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.

'இலங்கை  சிறிய நாடு. இங்கு இடம்பெறும் ஊழல்களை ஒழித்துக்கட்டினால் மக்கள் தமது வாழ்வில் முன்னேற்றம் அடைவர்;. நாடும் அபிவிருத்தி அடையும்.

தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகள் சூரையாடப்பட்டமையை நானறிவேன்.

ஒருவருக்கு 20,000 ரூபாய் வரை செலவு செய்து, குடும்ப வாக்குகளை சூறையாடி வந்த கலாசாரம் தலவாக்கலையில் நடந்தேரியதை மக்கள் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.     எனவே, தலவாக்கலையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பணத்துக்கும் உணவு பொருட்களுக்கும் மக்கள் சோரம் போகாமல், நல்ல சேவையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்த தமது வாக்குகளை வழங்க வேண்டும்.

எதிர்வரும் தேர்தலில் தலவாக்கலை நகர சபையின் ஆட்சியை ஐ.தே.க கைப்பற்ற, அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்' என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .