2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீட்டிப்பு

Editorial   / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட, தம்புள்ளை, வெலிகபொல பகுதிகளுக்கும் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் பம்பஹின்ன – பலாங்கொடை வீதியிலும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

குறித்த  மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (12) பிற்பகல் 3 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில்  இன்றைய தினம் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .