2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

மணல் அகழ்ந்த அறுவர் கைது

பாலித ஆரியவன்ச   / 2017 மே 30 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹாவலி கங்கை, லொக்கல்லாஓயா, மங்கட வனபாதுகாப்பு திணைக்களத்துக்கு சொந்தமான பகுதியில், நீண்டகாலமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த அறுவரை, இன்று (30) அதிகாலை வனபாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன், மண் அகழ்வுக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் படகுகள் இரண்டையும் கைப்பற்றியுள்ளனர்.

மங்கட பிரதேசத்தைச் சேர்ந்த அறுவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வியாபாரி ஒருவரின் ஆலோசனைக்கு அமைவாகவே, மேற்படி அறுவரும் மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளதாக, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி அறுவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .