Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2016 மே 30 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, வேவல்வத்தை பம்பரபோட்டுவ பகுதியில் மண்சரிவு ஏற்படுவதற்கு மேற்படி வீதியை அபிவிருத்தி செய்துவரும் தனியார் ஒப்பந்தகாரர் நிறுவனமே காரணமாகும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரோ தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா கடந்த புதன்கிழமை(25) நேரில் சென்று பார்வையிட்டபோது அப்பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் மாகாண ஆளுநரிடம் செய்த முறைபாட்டையடுத்து, இது குறித்து மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (30) விசேட கலந்துரையாடல் ஒன்று சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இரத்தினபுரி, வேவல்வத்தை வீதி தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. வீதிகளில் அன்மித்த மண் திட்டுகளை அகட்டும்போது அந்த மண்களை மேற்படி பம்பரபோட்டுவ வித்தியாலய மைதானத்தில் கொண்டு குவிப்பதால் தற்போது அந்த மைதானத்தின் கீழ் மட்டத்திலிருந்து 40 அடி உயரத்துக்கு மண் குவிக்கப்பட்டள்ளதை நான் நேரடியாக அவதானித்தேன்.
இவ்வாறு மண் குவிக்கப்பட்டு உள்ளதன் காரணத்தினாலேயே அந்த மண்திட்டு சரிந்து விழுந்ததில் அப்பிரதேசத்தில் உள்ள 6 வீடுகள் சேதமடைந்தனர். மேலும் 20 வீடுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி பம்பரபோட்டுவ பகுதியில் மண்சரிவில் பாதிக்கப்பட்டு 16 கும்பங்களை சேர்ந்த 64 பேர் மேற்படி அப்பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
மேற்படி மைதானத்தில் 40 அடி உயரத்தில் மண் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பிரதேச மக்கள் பாதிக்கப்பட்டள்ளார்கள்.
மண்திட்டுகள் சரிந்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் இதில் சம்பந்தப்பட்டவர்களை இனங்கண்டு அவர்ருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அது குறித்து தனக்கு அறிக்கை ஒன்றை விரைவில் சமர்ப்பிக்கமாறும் மாகாண அரச அதிகாரிகளுக்கு சப்ரகமுவ மாகாண ஆளுநர் மாஷல் பெரேரா உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
4 hours ago
5 hours ago