2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மத்திய மாகாண ஆளுநர் நாளை கடமைகளை பொறுப்பேற்பார்

மொஹொமட் ஆஸிக்   / 2019 நவம்பர் 26 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி லலித் யூ. கமகே, நாளை (27), தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

தென்மாகாணத்தின் ஹபராதுவ ஸ்ரீ சுமங்கள வித்தியாலயம், காலி மஹிந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்ற அவர், கொழும்புப் பல்கலைகழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டுள்ளார். 1981ஆம் ஆண்டு முதல், சட்டதரணியாகக் கடமையாற்றியுள்ளார்.

1997ஆம் ஆண்டு அரசியலுக்குள் நுழைந்த இவர், காலி மாநகர சபையின் உறுப்பினராகவும் தென் மாகாணசபை உறுப்பினராகவும் கடமையாற்றியிருந்தார்.

இந்நிலையில், தற்போது மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இவர், மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .