Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
மொஹொமட் ஆஸிக் / 2020 ஜனவரி 05 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய மாகாணத்தில், 1,521 பாடசாலைகளின் சுற்றுச்சூழலில், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து, அது தொடர்பாக, அறிக்கையிடுமாறு, மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மத்திய மாகாணப் பாடசாலைகளின் சுற்றாடல்களை, டெங்கு நுளம்புகள் அற்ற பகுதிகளாக மாற்றுவதற்கு, மாகாணக் கல்வி அமைச்சும் சுகாதாரத் திணைக்களமும் ஒன்றிணைந்து, வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றன. இதற்கான மேற்பார்வையை, மத்திய மாகாண ஆளுநர் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், இரு வாரத்துக்கு ஒருமுறை, இந்தச் செயற்றிட்டத்தின் தொகுப்பை, மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு என்பவற்றுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
15 கல்வி வலயங்களினதும் வேலைத்திட்டங்கள், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேற்பார்வை விவரங்கள் போன்றவற்றை, மாகாண ஆளுநருக்குச் சமர்ப்பிக்க, மாகாண கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இவை, மாகாண ஆளுநரின் டெங்கு ஒழிப்புக் கமிட்டி, டெங்கு ஒழிப்பு மாகாண செயலணி ஆகியவற்றுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி மாவட்டத்தில் 650 பாடசாலைகளும் மாத்தளை மாவட்டத்தில் 323 பாடசாலைகளும், நுவரெலியா மாவட்டத்தில் 548 பாடசாலைகளும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago