2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி வன்புணர்வு: நான்கு பேர் கைது; மூவரை தேடி வலைவீச்சு

Kogilavani   / 2016 மார்ச் 11 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா     

மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நால்வரை, ஊவா-பரணகம பொலிஸார் புதன்கிழமை(9) கைதுசெய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட யுவதி, ஊவா பரணகம வைத்தியசாiலில் அனுமதிக்கப்பட்டு  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில், யுவதி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதுடன் வைத்தியசாலை நிர்வாகம் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போதே மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை, கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--