Kogilavani / 2017 ஜூன் 13 , பி.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலிய நகரிலிருந்து காட்மோர் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான பஸ்ஸானது, முறையாக சேவையில் ஈடுபடாததால், தாம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்தப் பஸ்ஸில் பயணிப்பதற்காக, பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் முன்கூட்டியே பயணச் சீட்டைப் பெற்றுள்ளபோதிலும், தனியார் பஸ்ஸுக்கே அதிகளவு பணத்தைக் கொடுத்துச்செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக, பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக, இ.போ.சவின் ஹட்டன் டிப்போ முகாமையாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, இவ்வாறான முறைப்பாடு இதுவரை தனக்குக் கிடைக்கவில்லை என்றும், அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தால், அவை தொடர்பில் ஆராய்ந்து, உரிய தீர்வை பெற்றுத்தருவதாகவும் கூறினார்.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago