2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மலசலகூடத்தை புனரமைத்து தருமாறு கோரிக்கை

Kogilavani   / 2017 ஜூன் 13 , பி.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகசேனை நகரிலுள்ள பொது மலசலகூடமானது, நீண்டகாலமாக புனரமைப்பின்றி காணப்படுவதால், பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.   

நுவரெலியா பிரதேச சபையினால் நிர்மாணித்துக்கொடுக்கப்பட்ட இந்த மலசலகூடத்தின் கூரைகள் மற்றும் கதவுகள் உடைந்துக் காணப்படுவதுடன், கழிவறை இருக்கைகளும் பயன்படுத்த முடியாதளவு சேதமடைந்து, காணப்படுகின்றன.  

நாகசேனை நகருக்கு வரும் பொதுமக்கள், இந்த மலசலகூடத்தையே பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.  

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மலசலகூடத்தைப் புனரமைத்து தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, பிரதேசவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X