Editorial / 2020 ஜனவரி 09 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
ஜனாதிபதியின் அக்கிராச உரையில், பெருந்தோட்டத்துறை மக்கள் பற்றி பேசவில்லை என்பது கவலையளிப்பதாகத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் இராதாகிருஸ்ணன், மலையகத்தில் ஜனாதிபதியின் சேவைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான சபை ஒத்திவைப்பின் இரண்டாம் நாள் விவாதம், நேற்று (08), நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதியின் அக்கிராச உரையில், பெருந்தோட்டத் துறை தொடர்பில் கூறப்பட்டிருந்தாலும், பெருந்தோட்டத் துறை மக்கள் பற்றி எதையும் கூறியிருக்கவில்லை என்றும் இவர்களே, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெருமளவில் பங்காற்றி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, 1,000 தேசியப் பாடசாலைகள் திட்டத்தில், மலையகப் பாடசாலைகளும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என்றும் மலையகத்தில் பல்கலைக்கழம் அமைக்கும் திட்டத்தை, ஜனாதிபதி உள்வாங்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.
3 hours ago
6 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
17 Jan 2026
17 Jan 2026