2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மலையகம் பாரியளவில் அபிவிருத்திகண்டுவருகின்றது

மு.இராமச்சந்திரன்   / 2017 மே 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் திகாம்பரம், கடந்த 2 வருடங்களுக்குள், மலையகத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்ததனூடாக, மக்கள் மனதில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழுகின்றார்” என்று, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.   

நோர்வூட், கிளங்கன் மேற்பிரிவு தோட்டப்பாதை, ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.  

அங்கு மேலும் கூறிய அவர்,  

“அமைச்சர் திகாம்பரம், அமைச்சுப் பொறுப்பை ஏற்ற இரண்டு வருட காலத்துக்குள் 2,000 வீடுகளை நிர்மாணித்துள்ளதோடு, இவ்வருடமும் ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடித்தளத்தை மேற்கொண்டுள்ளார்.  

“நுவரெலியா மாவட்டத்தில் மட்டுமன்றி, பெருந்தோட்ட மக்கள் வாழ்கின்ற அனைத்து மாவட்டங்களிலும், இவரின் சேவை தொடர்கின்றது.   

“வீடுகளை அமைப்பதோடு, தோட்டங்களின் உட்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   

எனவே, கடந்த காலங்களில், அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு சுகபோகங்களை அனுபவித்தவர்கள், இன்று காழ்ப்புணர்வு நிலைக்கு உள்ளாகியுள்ளனர். எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு, எமது சேவைகளை மக்களுக்கு வழங்குவோம்” என்று அவர் மேலும் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X