2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

’மலையக அபிவிருத்திக்கு துணையாக இருப்போம்’

Editorial   / 2017 ஜூன் 04 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா. திருஞானம்   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போல, மலையகத்தின் அபிவிருத்திக்கு நாம் என்றும் துணையாக இருப்போம்” என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தார். 

இந்திய உதவியுடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 4,000 வீடுகள் அமைப்பதற்கான செயற்றிட்டத்தில், இறம்பொடை - ஹெல்பொட தோட்டத்தில் 100 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று (03) நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  

“மலையகத்தின் அபிவிருத்திக்காக இலங்கையுடன் சேர்ந்து இந்தியா தொடர்ந்தும் பாடுபடும். இலங்கையின் அபிவிருத்திக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகின்றது.

இந்தியாவின் இந்த உதவி திட்டங்கள் மலையக பகுதிக்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு துணையாகவும் உங்கள் பயணத்துக்கு நாங்கள் உறுதுணையாகவும் இருப்போம். பிரதமர் மோடி அறிவித்த 10,000 வீடுகளையும் வெகு விரைவில் கட்டுவதற்காக இலங்கை அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது” என்றார்.  

மேலும், “புதிய திட்டங்களாக உங்கள் பகுதியில் புஸ்ஸலாவையில் அமைந்துள்ள சரஸ்வதி மத்திய கல்லூரி உட்பட பல தோட்ட பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும் தொழில் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் வழிகள் மேற்கொள்ளப்படும்.  

“இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் தற்போது சிறப்பாக செயற்பட்டு வரும் அவசரகால அம்புலன்ஸ் சேவை மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் செயற்படுத்தப்படும். மலையக பகுதியின் அபிவிருத்திக்கு மேலும் பல்வேறு புதிய செயற்றிட்டங்களை மேற்கொள்ள சித்தமாக இருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .