2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மலையக மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முடியவில்லை:இராதா

Sudharshini   / 2016 ஜூலை 18 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

வடக்கு மக்களின் பிரச்சினைகள், உலகளாவிய ரீதியில், குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையிலும்  பேசப்படுகின்றன. ஆனால், உள்நாட்டில் கூட பேசித் தீர்வு காணமுடியாத நிலையில், மலையக மக்களின் பிரச்சினைகள் உள்ளன என்று இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'யுத்தம் மற்றும் அதனால் ஏற்பட்ட சேதம் காரணமாக, வடக்கு மாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணம், ஆனையிறவு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, நந்திக்கடல், முள்ளிவாய்க்கால் போன்ற இடங்கள், சர்வதேச அளவில் பேசப்படுகின்றன. மீரியபெத்த, வெதமுல்ல கயிறுக்கட்டி, களுபஹன, அரநாயக்க போன்ற பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகவே, மலையகத்தைப் பற்றியும் சில உலக நாடுகள், ஓரளவிலேனும் தெரிந்திருக்கின்றன' என்றார்.

'வட மாகாணத்தின் குறிப்பிட்ட சில பிரதேசங்கள், அபிவிருத்தியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றன. மலையகத்தைப் பொறுத்தவரையில், அதன் அபிவிருத்திகள், மந்த கதியிலேயே நடைபெறுகின்றன.

உழைப்புக்;கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை, வீடு மற்றும் காணியுரிமை கிடைக்காமை, அனர்த்தங்களுக்கான நிவாரணம் கிடைக்காமை போன்றவையும், மனித உரிமை மீறல்களாகும். இந்த மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா.வில் பேசி முடிவு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. உள்நாட்டிலாவது பேசித் தீர்மானிக்க வேண்டியது கட்டாயமானதாகும். இதற்காக நாங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க பின்நிற்கப் போவதில்லை' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .