2021 மே 15, சனிக்கிழமை

மஸ்கெலியா வைத்தியசாலையின் குறைகள் நிவர்த்திக்கப்படும்

Kogilavani   / 2016 ஜூலை 27 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் நிலவிவரும் அனைத்துக் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைளை மேற்கொள்வதாக மத்திய மாகாண சுகதார அமைச்சர் பந்துல யாலகே உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, இவ்வைத்தியசாலைக்கு 3 தாதியர்களை எதிர்வரும் 2ஆம் திகதிக்குள் நியமிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கிவரும், இவ் வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகள் தொடர்பில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் மற்றும்

ஆர்.ராஜாராம் ஆகியோர்  மாகாண சுகாதார அமைச்சர் பந்துல யாலகேவின் கவனத்துக்கு கொண்டுச் சென்றுள்ளனர். இதன்போதே அவர் மேற்படி குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

இவ்வைத்தியசாலையில் கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையிலுள்ள   மின்பாரதூக்கியையும் சீர்செய்து தருவதாகவும் வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை,  மருந்து பொருட்கள் பற்றாக்குறை, அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் அதற்கான சாரதிகளையும் பெற்றுக்கொடுப்பதோடு வைத்தியர்களையும் நியமிப்பதாக   அவர் உறுதியளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .