2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மாகாண சபைகளுக்காக முதலமைச்சர்கள் ஒன்பது பேரும் ஒன்றிணையவுள்ளோம்

Kogilavani   / 2016 மார்ச் 24 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மாகாண சபைகளின் நலன் கருதி ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மாகாண சபைகளுக்குக் கிடைக்க வேண்டிய அதிகாரங்கள் மற்றும் நிதியை, உரிய முறையில் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து முதலமைச்சர்களும் இணைந்து செயற்படுவதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கண்டி, ஹாரிஸ்பத்துவையில் செவ்வாய்க்கிழமை(22) இடம்பெற்ற உலக நீர் தினத்தையொட்டிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்;. அவர் அங்கு மேலும் கூறுகையில்,

'மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது, மத்திய அரசங்கமானது, ஒரு தொகையை தம் வசம் வைத்துக்கொள்கிறது.  அவ்வாறு இருந்தால் மாகாண சபைகளுக்காக பணியாற்ற முடியாது. அரசியல் யாப்பின் மூலம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள்; வழங்கப்பட்டுள்ளன. மாகாண சபை தேவையில்லை என்றால் அது தொடர்பில் வேறாக பேசலாம். ஆனால், தற்போது மாகாண சபை என்ற ஒன்று உள்ளது.

அதற்கான அதிகாரங்கள் கிடைக்கப்பெற வேண்டும். அதனை பெற்றுக் கொள்வதற்காக நாட்டிலுள்ள ஒன்பது முதலமைச்சர்களும்; இணைந்து செயற்படுகின்றோம். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளோம்.  அமைச்சரவையையும்; சந்தித்து  வேண்டுகோள் விடுக்க உள்ளோம்' என்றார்.

'வரதராஜ பெருமாளைப் போன்று நாங்கள், நாட்டின் ஒரு பகுதியை துண்டித்து கேட்கவில்லை. சட்டத்தின்படி மாகாண சபைகளுக்குக் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பெற்றுத்தருமாறே நாங்கள் கோருகிறோம்' எனவும் அவர் இதன்போது கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X