2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மினி சூறாவளியால் கூரைகள் பறந்தன

Kogilavani   / 2016 ஜூலை 10 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ

கினிகத்தேனை, தெல்தொட்டை ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மாலை வீசிய  மினி சூறாவளியினால் 11 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கினிக்தேனை அம்பகமுவையில் வீசிய மினி சூறாவளியினால் மூன்று வீடுகளின் கூரைகள்   சேதமடைந்துள்ளதுடன் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.    

தெல்தோட்டை-போப்பிட்டிய தோட்டத்தில் வீசிய மினி சூறாவளியினால் லயன் அறையொன்றின் கூரைகள் சேதமாகியுள்ளதுடன் 8 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள்  உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .