2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

'முற்பணம் வழங்கப்படவில்லை':சென். கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் விசனம்

Niroshini   / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் சென். கூம்ஸ் தோட்டத்திலுள்ள கத்தோலிக்க தொழிலாளர்களுக்கு கிறிஸ்மஸ் பண்டிகை காலத்தில்  வழமையாக வழங்கப்படும் பண்டிகை முற்பணத்தை வழங்க தோட்ட நிர்வாகம் கால தாமத போக்கை காட்டி வருவதாக அப்பகுதி தோட்டத்​தொழிலாயர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இம்மாதம் 25ஆம் திகதி கொண்டாடவுள்ள கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒன்பது நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், வீட்டுக்கு பண்டிகைக்கான உணவு பொருட்கள்,  அலங்கார பொருட்கள் மற்றும் புத்தாடைகள் வாங்குவதற்கு திண்டாடுவதாக தோட்டத்தொழிலாயர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகம் கடந்த 15ஆம் திகதி  வழங்க வேண்டிய முற்பணத்துக்கான பணத்தை, தேயிலை சபை வழங்க தாமதிபாபதாக அத்தோட்ட அதிகாரி லக்ஷ்மன் ஜெயலத் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்று ( 16) மாலை இடம்பெற்ற பேச்சு வார்த்தையில்எதிர்வரும் திங்கட்கிழமை  மாலை முன்பணம் வழங்க ஏற்பாடு செய்வதாகவும்அவர்  தெரிவித்துள்ளார்.

கூறியபடி, திங்கட்கிழமை தோட்ட நிர்வாகம் முற்பணத்தை வழங்காவிடில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .