2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

ரூ 80 இலட்சம் பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

தம்பதிவ யாத்திரைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட நபரை, மஹவெல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபர்,  சுமார் 20 பேரிடம்,  80 இலட்சம் ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த மக்கள், கிராமிய வங்கிகளில் பணத்தை கடனாக பெற்றே மேற்படி நபரிடம் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

மாத்தளை மாவட்டத்துக்கு உட்பட்ட தும்கல வத்த, இமுலன்தண்ட, ரஜகம்மான, தொடம்வெ மற்றும் மடவல உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களே, இவ்வாறு பணமோசடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .