2021 மார்ச் 01, திங்கட்கிழமை

லிந்துலை வைத்தியசாலையில் அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-புஷ்பராஜா

நுவரெலியா மாவட்ட சுகாதார காரியாலயத்துக்கு உட்பட்ட லிந்துலை வைத்தியசாலையில், அடிப்படை வசதிகளின்றி தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக நோயாளிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் இன்றி வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள் பல அசௌகரியங்களுக்கு முகங்;கொடுப்பதாகவும் இரவு நேரங்களில்; நுளம்புத் தொல்லை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, வைத்தியசாலையில் பிரேத அறை இன்மையால், இறந்தவர்களின் சடலங்களும்; நோயாளர்கள் தங்கியிருக்கும் விடுதியிலே வைக்கப்படுகின்றன. இதனால் வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெறும் நோயாளர்கள் அச்சத்தின் மத்தியில் உள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வைத்தியசாலையில் இருந்த பிரேத அறை பல வருடங்களுக்கு முன்னர் வாகனம் நிறுத்தும் இடமாக மாற்றப்பட்டதாகவும் அதற்குப் பின்னர், பிரேத அறைக்கான இடம் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்யுமாறு கோரி, பிரதேச மக்கள் பல தடவை ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டபோதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, இவ்வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கு வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .