2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

வாக்காளர் அட்டை விநியோகத்தில் தாமதம்

Editorial   / 2019 நவம்பர் 08 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

 

பலாங்கொடை பிரதேசத்தில், வாக்காளர் அட்டை விநியோகத்தில் தாமதம் இடம்பெற்று வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள் தபால்மூலம் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை வாக்காளர் அட்டைகள் கிடைக்காத கணிசமான தொகையினர் அதனை எதிர்பார்த்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காத சிலர், பல்வேறு இடங்களுக்கும் அலைந்துத் திரிந்து அவற்றைப் பெறுவதற்கான வழிவகைகள் அறிந்துகொள்ள முயல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தபாற்றுறையினர் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி, அவற்றை உரியவர்களுக்குத் தாமதமின்றி விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .