2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

’வனராஜா வட்டாரம் இரண்டாகும்’

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ சண்முகநாதன்

மீண்டும் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்படும் போது, நோர்வூட் பிரதேச சபைக்குக்குட்பட்ட டிக்கோயா-வனராஜா வட்டாரத்தை, இரண்டாகப் பிரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தொழிலாளர் தேசிய முன்னணி பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். திலகராஜ் தெரிவித்தார்.

வனராஜா தோட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ்ஜின் பன்முகப்படுத்தப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடடி்ன் மூலம் கொங்கிரீட் இடப்பட்ட பாதை, மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தப் பகுதியில், 13 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வந்த போதிலும், அவர்களுக்குச் சே​வை செய்ய, ஒரு உறுப்பினர் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் எனவே, இந்த வட்டாரம் இரண்டாகப் பிரிக்கப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு, வருடமொன்றுக்கு 10 மில்லியன் ரூபாய் மாத்திரமே நிதியொதுக்கீடு செய்யப்படுவதால், தோட்டப் பகுதிகளில் பாதைகளை புனரமைக்கும் போது, ஒரே தடவையில் கூடுதலான நிதியை ஒதுக்கித் தர முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எனவேதான், தோட்டப் பகுதி பாதைகள் அனைத்தையும் அரசாங்கம் பொறுப்பேற்று, மாகாண அமைச்சின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

வனராஜா வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர், இப்போது எங்கே இருகின்றார் என்று தெரியவில்லை என்றும் இருந்தும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் சுப்பிரமணியம், இந்தப் பிரதேசத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--