2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

விபத்தில் ஐவருக்குக் காயம்

Editorial   / 2020 ஜனவரி 10 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
 

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை தியகல - நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில், தியகல பகுதியில், இன்று (10) காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்த நிலையில், வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என,  பொலிஸார் தெரிவித்தனர்.

வானொன்று, வீதியை விட்டு விலகி, 100 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததாலேயே, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

கம்பளையைச் சேர்ந்தவர்கள், சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவர்களே. இவ்வாறு காயமடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--