Kogilavani / 2016 மார்ச் 18 , மு.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஷ், கு.புஸ்பராஜ், எஸ்.சுஜிதா
'தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன், லூசா தோட்டத்தில்; இடம்பெற்ற மோதலில், உயிரிழந்த 65 வயது பெண்ணின் மரணமானது, திட்டமிட்டக் கொலை' என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 24ஆம் திகதி இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது, தாக்குதலுக்கு உள்ளான வயோதிபப் பெண், கடந்த 14ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவரை கைதுசெய்த தலவாக்கலை பொலிஸார், அவருக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நீதவான் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நேற்று(17) வருகை தந்த நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் ருவான் த சில்வா, சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
சாட்சியாளர்கள் மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில்; ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
4 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
1 hours ago
2 hours ago