2021 மார்ச் 08, திங்கட்கிழமை

18 வருடங்களின் பின் கம்பளை தேர்தல் தொகுதி ஐ.தே.க வசம்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை தேர்தல் தொகுதியானது கடந்த 18 வருடங்களின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் வசமாகியுள்ளதாக கம்பளை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சமந்த அருணகுமார கூறினார்.

கம்பளையில் திங்கட்கிழமை (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை  கூறினார்.

'இத்தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டதில் 15,632 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளேன்.  வாக்களித்து என்னை வெற்றியாளராக்கிய அனைத்து மக்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன்.

புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் கம்பளை தேர்தல் தொகுதி மக்களின் பங்களிப்பு பாரியது' என அவர் மேலும் கூறினார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .