2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளிக்கிழமைகளில் சிரமதானம்

Yuganthini   / 2017 ஜூலை 16 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொரிஸ் என்டனி  
“டெங்கு தொற்றுக் காரணமாக, இரத்தினபுரி மாவட்டமும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு செயற்றிட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அரச, தனியார் அலுவலகங்கள், வெளிச் சூழல்களில் டெங்கொழிப்பு சிரமதானத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் திருமதி மாலனி லொக்குபோத்தாகம தெரிவித்தார்.   

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,  

“டெங்கு காய்ச்சலிலிருந்து  மக்களை பாதுகாப்பதற்காக,   மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு  வருகின்றோம். இதற்கு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களிடம் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பும் மகத்தானது.

“நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நாங்கள் ஆரம்பிப்போம் டெங்குவை விரட்டுவோம்’ என்ற செயற்றிட்டத்துக்கு அமைவாக, இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கொழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“இனிவரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அரச அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், சுற்றுபுறச் சூழல்கள் என்பவற்றில் டெங்கொழிப்பு சிரமதானம் முன்னெடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் உட்பட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .