Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை
உமாமகேஸ்வரி / 2017 மே 29 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளத்தினால் தமது வியாபாரம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், இரத்தினபுரி நகர வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி நகரில் 18 அடிக்கு உயர்ந்திருந்த வெள்ளமானது, ஞாயிற்றுக்கிழமையே வடிந்தோட தொடங்கியது. இந்நிலையில், மூடப்பட்டிருந்த தமது வியாபார நிலையங்களை சுத்திகரிக்கும் பணிகளில் வியாபாரிகள், ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் வெள்ளத்தினால் அள்ளுண்டுச் செல்லப்பட்டதாகவும் சில பொருட்கள் விற்பனை செய்யமுடியாதளவு பழுதடைந்து காணப்படுதாகவும் வியாபார நிலையங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் ஈக்களின் பெருக்கமும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சில வியாபார நிலையங்களுக்கு முன்பாக சீனி, அரிசி, கோதுமை மா, சீமெந்து உள்ளிட்ட பல பொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளிலும் வெள்ளநீர் புகுந்துள்ளதால், அனைத்து பொருட்களும் விற்பனை செய்ய முடியாதளவு நாசமாகியுள்ளதாக, வியாபாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறுசிறுக கட்டியெழுப்பிய தமது பொருளாதார நிலை மீண்டும் அதளபாதாளத்துக்கே சென்றுவிட்டதாகவும் இனி, இதிலிருந்து எவ்வாறு மீண்டுவருவது என்பது தொடர்பில் தெரியாதுள்ளதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி, கஹவத்தை ஆகிய நகரங்களிலுள்ள வியாபார நிலையங்கள், நூல் நிலையங்களே அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. குறிப்பாக பலசரக்கு கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வியாபார நிலையங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago