2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வாகனத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

இரத்தினபுரி, நிவித்திகல பிரதேசத்தில் செவ்வாய்கிழமை (25) இரவு பயணித்துக்கொண்டிருந்த கெப் ரக வாகனம் ஒன்றிலிருந்து தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிவித்திகல, நொரகல்லவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கெப் ரக வாகனம் அதிக வேகமாக சென்றுகொண்டிருந்தபோது வளைவு ஒன்றில் வாகனத்தை திருப்ப முற்பட்ட போதே குறித்த நபர் வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.  

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .