Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஒக்டோபர் 05 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கற்குவாரியினால் ஏற்படும் அனர்த்தத்திலிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரி சுமார் 500ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் ஹட்டன்- நுவரெலியா பிரதான வீதியை மறித்து இன்று (05) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேபீல்ட், சாமஸ், ஆகீல், பிட்டவின் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 500ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள், குடாகம பகுதியில் வைத்தே வீதியை மறித்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கொட்டகலை ஆகீல் தோட்டத்தில் உள்ள கற்குவாரியின் மேற்பகுதியிலிருந்து பாரிய கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம் உள்ளதென தேசியக் கட்டட ஆய்வு மையம் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த கற்குவாரிக்கான அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வார்ப்பாட்டம் காரணமாக சில மணி நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் திம்புள்ள பத்தனை மற்றும் ஹட்டன் பொலிஸாரின் தலையீடு காரணமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
31 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
58 minute ago
1 hours ago
3 hours ago