Niroshini / 2016 ஜூலை 18 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்,சுஜிதா
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென். கிளயார் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற வானுடன் தலவாக்கலை பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டர் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.
படுங்காயங்களுக்குள்ளான நபர் கொட்டகலை வைத்தியசாலையிலல் இனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் தொடர்பில் வான் சாரதியை கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .