2021 மார்ச் 01, திங்கட்கிழமை

'விலகாது காங்கிரஸ்'

Kogilavani   / 2016 மே 26 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதர்ஷினி சாமிவேல்

'1,000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், போராட்டத்தில் ஈடுபட்டது. அது, மக்களின் நலனை மாத்திரமே நோக்காகக் கொண்டிருந்தது. 100 ரூபாய்க்கான போராட்டமானது, அரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது' என, அதன் உப-தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

'100 ரூபாய் சம்பள அதிகரிப்பைக்கொண்டு மக்கள், தமது வாழ்வைக் கொண்டு நடத்த முடியாது. 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு என்ற நிலைப்பாட்டிலிருந்து இ.தொ.கா எப்போதும் மாறாது. பேச்சுவார்த்தைகளுக்கு கம்பனிகள் உடன்பட்டு, பேரம்பேசும் நிலைப்பாட்டுக்கு வருமாயின், சில விட்டுக்கொடுப்புகளை செய்ய முடியும். ஆனால், 1,000 ரூபாய் சம்பளம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .