2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

ஸ்டெதன் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மு.இராமச்சந்திரன்   / 2017 ஜூன் 09 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று கூறி, ஸ்டெதன் தோட்டத் தொழிலாளர்கள் வீதியை மறித்து, இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு பொருத்தமான இடமொன்று இல்லாத காரணத்தினால், நகர பகுதிகளின் குப்பைகளை அகற்றமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளிலும் தேங்கிக்கிடக்கும் குப்பைகளினால் சூழல் மாசடைவதுடன் பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில்,  ஸ்டெதன் தோட்டப் பகுதியில் இனங்காணப்பட்ட  பகுதியை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச, அம்பகமுவ பிரதேச செயலாளர் ஆர்.பி.டி சுமனசேகர, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளர் எஸ்.பிரியதர்ஷினி, தோட்ட முகாமையாளர் உட்பட அரச அதிகாரிகள் இன்றுக் காலை விஜயம்  மேற்கொண்டு பார்வையிட்டனர்

இந்நிலையிலேயே,  ஸ்டெதன் தோட்டத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று கூறி, தோட்ட தொழிலாளர்கள்  வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்பாட்ட இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் பேச்சுவார்த்தையினூடாக தீர்வுகான வேண்டும் தெரிவித்ததையடுத்து,  ஆர்பாட்டம் கைவிடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X