2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஹக்கப்பட்சுவினால் யானை பலி

Kogilavani   / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரவிந்து விராஜ் அபயசிறி

மாத்தளை, நாலன்ன ரஜ்ஜம்மன பிரதேசத்தில் ஹக்கப்பட்டாசு வெடித்ததால் 30 வயதான யானை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

யானையின் உடலில் ஒரு பகுதி முற்றாக காயமடைந்துள்ளதாகவும் பிருட்டப் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்காயங்கள் காணப்படுதாகவும் உணவு உட்கொள்ள முடியாமல் இந்த யானை உயிரிழந்துள்ளதாகவும் வன ஜுவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக மூன்று யானைகள் அடங்கிய யானைக் கூட்டமொன்று, நாவுல, நால்ந்த, கெடவலக்கூடாக மடவல, உல்பன ஆகிய பிரதேசங்களுக்கு உட்புகுந்து அழிவுகளை ஏற்படுத்தியதாக பிரதேச மக்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த யானையின் மரணம் தொடர்பில் மஹவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .