2021 மே 12, புதன்கிழமை

ஹட்டன்-கொழும்புக்கு மற்றுமொரு பஸ்

Kogilavani   / 2017 ஜூன் 12 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஹட்டன் டிப்போவினால் கொள்வனவு செய்யப்பட்ட புதிய பத்து பஸ்களில், இரண்டாவது பஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.20 மணியளவில், கொழும்பு நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தது.

ஹட்டன் பிரதேச மக்களின் நலன்கருதி, 30 மில்லியன் ரூபாய் செலவில் பத்து பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மீதிப் பணத்தை தவணை அடிப்படையில் வழங்கும் வகையில், ஹட்டன் டிப்போ, இந்த பஸ்களை கொள்வனவு செய்துள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பஸ்களில், இரண்டாவது பஸ்ஸே, கொழும்பு நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

ஹட்டனிலிருந்து இரவு 7.20 மணிக்கு புறப்படும் இந்த பஸ் நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பை வந்தடையும் அதிகாலை 3.20 மணிக்கு மீண்டும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி தனது பயணத்தை ஆரம்பிக்கப்பவுள்ளது.

ஆரம்ப, நிகழ்வில், ஹட்டன் டிப்போவின் அதிகாரி அநுர தொட்டந்தென்ன உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .