2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன்-கொழும்பு வீதிக்குஇரும்பு வேலிகளை அமைக்கவும்

Gavitha   / 2016 மார்ச் 21 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு. இராமசந்திரன்

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியிலுள்ள மல்லியப்பூ சந்தியிலிருந்து செனன் வரையிலான வீதியோரங்களில், பாதுகாப்பு இரும்பு வேலிகளை அமைக்குமாறு வாகன ஓட்டுனர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் குறித்த வீதி காபட் இடப்பட்டு புனரமைப்பு பணிகள் யாவும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. சுமார் இரண்டரை கிலோ மீற்றர்  தூரம் வரையில், முன்பிருந்த இரும்பு பாதுகாப்பு வேலியை அகற்றி தற்போது பாதுகாப்பு கல் பதிக்கப்படுள்ளதால், வாகனத்தை செலுத்தும் போது அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் குறித்த வீதியில் இரும்பு வேலிகள் இருந்தமையால், பாரிய விபத்துக்கள் ஏற்படவில்லை. தற்போது விபத்து ஏற்பட்டால், வீதியிலுள்ள வாகனம் சுமார் 200 அடி பள்ளத்துக்கு தூக்கி வீசப்படும் என்று சாரதிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும் சிவனொளி பாத மலை பருவ காலத்தில் அதிகளவிலான வெளிமாவட்ட வாகனங்கள் வருகின்ற நிலையில், அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .