Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 11 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிபில மெதகம பிரதேசத்தில், பாடசாலை மாணவன் ஒருவன், மோட்டார் சைக்கிளில் 400 கிராம், நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருளை எடுத்துச் சென்றபோது, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெதகம-பொல்கஹாவெல பிரதேசத்தில், சனிக்கிழமை வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே, மாணவனை கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸார், அவரிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர். மாணவனிடம் வாகன அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை. இதனால், மாணவன் கடுமையாக அச்சமடைந்துள்ளார்.
சந்தேகம் கொண்ட பொலிஸார், மாணவனை உடற்சோதனைக்கு உட்படுத்தினர். அதன்போதே, மாணவனின் காற்சட்டை பொக்கட்டிலிருந்து நான்கு ஹெரோயின் பக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
தலா 100 மில்லிகிராம் நிறைகொண்ட ஹெரோயின் பக்கெட்டுக்களே இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
தன்னுடைய சிறிய தந்தை வழங்கும் ஹெரோய்ன் பக்கெட்டுகளை, பாடசாலை முடிந்ததும், பாடசாலை விடுமுறை நாட்களிலும் குறித்த மாணவன், மெதகம நகரில், மிகவும் இரகசியமான இடத்தில் மறைத்துவைத்து விற்பனை செய்துவருவதாக, விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பக்கெட்டுக்களுடன் மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago